கழிவறையில் மொபைல் போன் பயன்படுத்துபவரா நீங்கள்?… எச்சரிக்கும் ஆய்வு! |Are you a mobile phone user in the toilet?

Share

மொபைல்போனை கழிவறைக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சுத்தத்தைக் குறித்துத் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருந்தாலும், இது போன்ற பழக்கவழக்கங்கள் உடல்நல பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

இந்நிலையில், `NordVPN’ என்ற நெட்வொர்க் இணைப்பை வழங்கும் நிறுவனம், இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் 10-ல் 6 பேர், குறிப்பாக இளைஞர்கள் கழிவறையில் மொபைல் போனை உபயோகிப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

ஆய்வில் பங்கேற்றவர்களில்…

* 61.6 சதவிகிதம் பேர், கழிப்பறை இருக்கையில் அமர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்த்ததாக ஒப்புக்கொண்டனர்.

* 33.9 சதவிகிதத்தினர், தற்போதைய நடப்புகளை அறிந்து கொள்வதற்காக, மொபைல்போனை பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

* 24.5 சதவிகிதம் பேர், தங்களின் அன்புக்குரியவர்களுக்குச் செய்தி அனுப்புவது அல்லது அழைப்புகளை மேற்கொள்வதற்காக, மொபைல்போனை கழிவறையில் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட்போனை கழிவறைகளில் பயன்படுத்தும் போது மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடிய பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள், மொபைல்போனில் வாழ்வதற்கான நிலையை நாமே ஏற்படுத்துகிறோம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com