வெளியில் சென்று சாப்பிடும்போது கூட குளுகுளுவென்று எதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஐஸ் கிரீம், ஃபலூடா, ஜிகிர்தண்டா போன்றவற்றை சாப்பிடுவோம். ஃபலூடாவை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா? அதற்கு அதிகம் சிரமப்படத் தேவை இல்லை.எளிமையானது தான். அதன் ரெசிபியை சொல்கிறோம்.
‘ஃபலூடா’ என்பது பாரசீக நாட்டில் தோன்றியது. அங்கிருந்து 16-18 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் பல மத்திய ஆசிய அரசர்கள் இந்தியா மீது படையெடுத்து இங்கு குடியேறியதன் மூலம் ஃபலூடா இந்தியாவை அடைந்தது. பின்னர், அதில் சில மாற்றங்கள் கொண்டுவந்து முகலாயப் பேரரசு சமையல்காரர்கள் ஃபலூடாவின் தற்போதைய வடிவத்தை கொண்டு வந்தனர்.
இந்தியாவில் உள்ளதைப் போலவே இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலும் குறிப்பாக மும்பை, புனே, டெல்லி மற்றும் குர்கானில் ஃபலூடா பிரபலமான உணவாக உள்ளது. சாப்பிட்ட பின்னர், இனிப்பு சாப்பிடும் பழக்கம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது. அதில் அதில் ஈர்ப்பது ஃபலூடா தான். அதை இனி நாம் நம் வீட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
சப்ஜா விதைகள் ,
சேமியா ,
ரோஸ் எசன்ஸ்,
சுண்டவைத்த பால்,
சர்க்கரை,
ஜெல்லி,
ஐஸ்கிரீம்,
உலர் பழங்கள்
நட்ஸ்
செய்முறை:
1/2 ஸ்பூன் சப்ஜா விதைகளை சுத்தம் செய்து ஒரு கிண்ணத்திதில் தண்ணீர் ஊற்றை ஊறவைக்கவும். ஃபலூடா செய்வதற்கு ஒரு நாள் முன் இரவே சப்ஜா விதைகளை ஊறவைத்துக்கொள்ளுங்கள். நன்றாக ஊறிய பின்னர் அதை வடிகட்டியில் வடித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு கப் அளவு சேமியாவை எடுத்து அதை கொதிக்கும் வெந்நீரில் போட்டு மிருதுவாக மாறும்படி வேகவைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதையும் தண்ணீர் வடித்து ஆறவைத்துக்கொள்ளுங்கள்.
இனிப்பு சுவைக்கு தேவையான சர்க்கரை சேர்த்து பாலை அடி கனமான பாத்திரத்தில் குறைந்த தீயில் வைத்து சுண்ட காய்ச்சி அதையும் ஆடையோடு சேர்த்து ஆறவைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஃபலூடாவிற்கான அனைத்து பொருள்களும் தயார். இதை டம்ளரில் அடுக்கினால் போதும்.
இதையும் பாருங்க: நூடூல் பிரியரா நீங்க..? அப்போ இந்த சீன நூடுல் வகைகளை தெரிந்துகொள்ளுங்கள்!
டம்ளர் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் ஜெல்லி போட்டு கொள்ளுங்கள். அடுத்து ஊறவைத்த சப்ஜா விதைகளை 1 1/2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள். அதற்கு மேலே உங்களுக்கு விருப்பமான அளவு வேகவைத்த சேமியாவை சேருங்கள்.
அதன் மேலே தேவையான அளவு ரோஸ் எசன்ஸ் ஊற்றிக்கொண்டு அதன் மேல் குளிர்ந்த பாலை ஊற்றிக்கொள்ளுங்கள் . அதன் மீது ஐஸ் கிரீம் ஒரு ஸ்கூப் வைத்து மேலே உலர்ந்த பழங்கள் மற்றும் நறுக்கிய நட்ஸ் போட்டால் ஃபலூடா ரெடி. இதைத் தாண்டி பிரெஷ் பழங்களைத் துண்டு துண்டாக்க நறுக்கி அதில் சேர்த்துக்கொள்ளலாம். உலர் பழங்களை கூட அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம், வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்க..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.