அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் (APCC) குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு (PICU) ஆரம்பம்! | Apollo Proton Cancer Centre(APCC) Unveils State-of-the-Art Paediatric Intensive Care Unit (PICU)

Share

குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓவியம் உட்பட, கலைப்படைப்புகளின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியின் கவின் கலைகள் துறையின் தலைவர் டாக்டர். லட்சுமி பிரியா டேனியல் வலியுறுத்தினார்.  அவர் பேசுகையில், “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் இந்த கலைப்படைப்புகளை உருவாக்க இதுவொரு கிளர்ச்சியூட்டும் சிறப்பான வாய்ப்பாகும்.  நோயாளிகளுக்கு அதுவும் குறிப்பாக, குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில் மிக அதிகமாக தேவைப்படும் நேர்மறை உணர்வையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்கி அவர்கள் மனதை அமைதிப்படுத்தும் சிறப்பான திறன் கலைக்கு இருக்கிறது.  குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவில் கலைப்படைப்புகளை இடம்பெறச் செய்வதன் மூலம் நோயாளிகளின் உணர்வுரீதியான நலத்தை பேணி வளர்க்கும் ஒரு நல்ல சூழலை நம்மால் உருவாக்க முடியும்.  நோயாளிகள் மனதில் நேர்மறை உணர்வை இது பதிய வைப்பதோடு, நோய் பாதிப்பிலிருந்து, மீண்டு குணமடைகின்ற அவர்களது ஒட்டுமொத்த செயல்முறையையும் கலை நிச்சயமாக மேம்படுத்தும்.” என்று குறிப்பிட்டார். 

புற்றுநோய் சிகிச்சையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சையை வழங்குவதற்காக இந்த மிக நவீன பிரிவினை நிறுவியிருப்பதன் வழியாக தனது சேவையின் பரப்பை அப்போலோ கேன்சர் சென்டர் மேலும் விரிவுபடுத்தியிருக்கிறது.  

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com