மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள்
மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் பின்வருமாறு:-
சென்னை- 61
காஞ்சிபுரம்- 31,
திருவள்ளூர் – 46
கோவை – 78,
மதுரை – 125,
சேலம் – 59,
திருச்சி – 100
ஜூலை 3 முதல் வகுப்புகள் தொடக்கம் : உயர்கல்வித்துறை அறிவிப்பு
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் உயர்கல்வித்துறை அறிவிப்பு
ஜூன் 30-ம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இரண்டு கட்ட கலந்தாய்வு தற்போது முடிந்துள்ளதாகவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலை திறக்க உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு
சட்டம் – ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலை திறக்க உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது – டாஸ்மாக் நிர்வாகம்
500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இதையடுத்து 500 சில்லரை விற்பனை கடைகள் மூடப்படும் என ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10-ம் வகுப்பு மறு மதிப்பீடு ரிசல்ட் நாளை வெளியீடு
10-ம் வகுப்பு மறு மதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம். பட்டியலில் பெயர் இல்லாத மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை எனவும் அரசு தேர்வுதுறை தெரிவித்துள்ளது
செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் ; உச்சநீதிமன்றம் கருத்து
அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்திலேயே முறையிடமாறு கருத்து தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருவதால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடுவது குறித்து முடிவெடுப்போம் எனவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் மருத்துவக் குழு அமைத்து செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறியலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் அனுமதித்தது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் : அமலாக்கத்துறை வாதம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. இதில் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கில் விசாரணை தொடக்கம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
நாளை பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளை மறுநாள் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது – காவேரி மருத்துவமனை அறிக்கை
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை முடிவடைந்தது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் பாலாஜி உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்” எனமருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், தஞ்சாவூர், மதுரை தென்காசி உள்ளிட்ட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நிறைவு
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் ஆபரேஷனுக்கு பிந்தைய வார்டுக்கு மாற்றப்பட்டார்.
கடலூரில் மீண்டும் தனியார் பேருந்து விபத்து
கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து பூண்டியாங்குப்பம் அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் நிலை தடுமாறி சாலைஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார். லேசான காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர்.
சர்வதேச யோக தினம் : நீருக்கடியில் யோகா செய்த இந்திய ராணுவ வீரர்கள்!
சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் நீருக்கடியில் யோகா செய்தனர்
VIDEO | Indian Army personnel perform underwater Yoga in Thiruvananthapuram on the occasion of #InternationalYogaDay2023 pic.twitter.com/vncQDBU6Kc
— Press Trust of India (@PTI_News) June 21, 2023
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கும் ’மாஸ்’ வரவேற்பு
முதல் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை வரவேற்க, நியூயார்க் நகரில் FIA என்ற இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வானில் 250 அடி பேனர் பறக்க வைக்கப்பட்டது. ஹட்சன் நதிக்கு குறுக்கே விமானத்தை பயன்படுத்தி இந்த பேனர் பறக்கவிடப்பட்டது.
#WATCH | FIA (Federation of Indian Associations) flies a 250 feet long banner over the Hudson River, in New York to welcome Prime Minister Narendra Modi for his historic visit to the United States. pic.twitter.com/adtsQ0rpVN
— ANI (@ANI) June 21, 2023
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அங்கு யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் பங்கேற்றார்.
#WATCH | Union MoS for Fisheries, Animal Husbandry, Dairying and Information & Broadcasting, @Murugan_MoS performs Yoga in Andaman to mark the #9thInternationalYogaDay. @moayush @MIB_India #IYD2023 pic.twitter.com/tkyrBWfToT
— DD News (@DDNewslive) June 21, 2023
யோகா கோபத்தை கட்டுப்படுத்தும்… புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேச்சு
புதுச்சேரி அரசின் யோகா விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், இரண்டு பிளேட் பிரியாணி சாப்பிட்டால் எவ்வளவு கொழுப்பு சேருமோ அந்த அளவிற்கு கொழுப்பு கோபப்பட்டால் உடலில் சேரும். ஆனால் யோகா கோபத்தை கட்டுப்படுத்தும்” என்றார்.
மேலும் யோகா கற்றால் கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
யோகா உலகை இணைக்கிறது: பிரதமர் மோடி
சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,யோகா உலகை இணைக்கிறது என தெரிவித்துள்ளார்.
Sharing my message on International Day of Yoga. https://t.co/4tGLQ7Jolo
— Narendra Modi (@narendramodi) June 21, 2023
அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு – இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்…
அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என, செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.