உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டியில் சுப்மன் கில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அவர் ஆட்டமிழக்கவில்லை என்றும் நடுவர் தவறான முடிவை அறிவித்து விட்டதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களும், 2 ஆவது இன்னிங்ஸில் 270 ரன்களும் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது போலந்த் வீசிய பந்தில் கேமரூன் கிரீனிடம் கில் கேட்ச் கொடுத்தார். ரீப்ளேவில் பார்க்கும்போது விக்கெட் இழப்பு இல்லை என்று பரவலாக கருதப்பட்ட நிலையில் 3ஆவது நடுவர் அவுட் என அறிவித்தார்.
Third umpire watching the replay before pressing out 🤦 #WTCFinal pic.twitter.com/ZTFeGsihpC
— Wasim Jaffer (@WasimJaffer14) June 10, 2023
Unlucky Shubman Gill.
It should’ve been Not Out. pic.twitter.com/CSxFzB1xc0— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 10, 2023
The back angle of Cameron Green’s catch. pic.twitter.com/vEaBvrF3OV
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 10, 2023
Rohit Sharma and Shubman Gill couldn’t believe that 3rd umpire gave that OUT. pic.twitter.com/X1hU9fGyIU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 10, 2023
அவரது அறிவிப்பு லண்டன் ஓவல் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விவாதங்களை சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளன. ரோஹித் சர்மா – சுப்மன் கில் இணை 7.1 ஓவரில் 41 ரன்கள் சேர்த்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.