Doctor Vikatan: விழித்திரை விலகுமா… அதற்கு சிகிச்சை உண்டா? | Doctor Vikatan: Is there a cure for retinal detachment?

Share

இந்தப் பிரச்னை வரப்போவதன் அறிகுறியாக, கண்களைச் சுற்றி ஃப்ளாஷ் அடிப்பதுபோல் உணர்வார்கள். கண்களில் ஏதோ பறக்கிற மாதிரி உணர்வார்கள். விழித்திரையின் நடுவில் மேகுலா என்ற பகுதி இருக்கும். அது பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்தமாக பார்வை இழப்பு ஏற்படும். பார்வை திடீரென குறைவதை வைத்து விழித்திரை விலகுவதை சம்பந்தப்பட்ட நபரால் உணர முடியும்.

சற்றும் தாமதிக்காமல் அந்த நபர் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை மட்டுமே.

விழித்திரை

விழித்திரை

விழித்திரை விலகல் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து எந்த வகையான அறுவை சிகிச்சை தேவை என்பது முடிவு செய்யப்படும். கேஸ் (Gas) அல்லது சிலிக்கான் ஆயில் கொண்டு இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை கொடுக்கப்படும்.

விழித்திரை விலகல் பாதிப்பு என்பது எமர்ஜென்சியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பிரச்னை. எனவே எவ்வளவு சீக்கிரம் சிகிச்சையைத் தொடங்குகிறோமோ, அவ்வளவு நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com