மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் தற்காலிக வாபஸ்: மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடனான சந்திப்பில் நடந்தது என்ன?

Share

மல்யுத்த வீரர்கள் போராட்டம் வாபஸ்

பட மூலாதாரம், ANI

மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார்களை முன்வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்தனர்.

நீண்ட நேரம் நீடித்த இந்த சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனுராக் தாகூர், பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான புகார்கள் மீதான விசாரணை வரும் 15-ம் தேதிக்குள் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்திய மல்யுத்த வீராங்கனைகள், மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்னைகளை சந்தித்த பின்னர் பேசிய அமைச்சர் அனுராக் தாகூர், “விசாரணை முடிவுக்கு வந்த பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து இந்த சந்திப்பின் போது பேசினோம். அதனை நாங்கள் செய்வோம்” என்று கூறினார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com