சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், பலரும் அதிக சர்க்கரை அல்லது இனிப்பு உள்ள டயட்டை தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை பலரும் பின்பற்றி வருகிறார்கள். இந்நிலையில், அதிக சர்க்கரை என்பது நீரிழிவு மட்டுமல்லாமல் வேறு சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். சமீபத்தில் அதிக சர்க்கரை இருக்கும் டயட்டை, அதாவது இனிப்பு உணவுகள் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு குடல் அழற்சி நோய் தீவிரமாகும் ஆபத்து இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பொதுவாகவே, ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாதவர்களுக்கு செரிமானத்தில் கோளாறு மற்றும் குடல் பிரச்சனைகள் ஏற்படும். அதிகமாக சர்க்கரை உட்கொள்வதால் உடலில் இருக்கும் லைனிங் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை ஒரு எலியை வைத்து ஆய்வு செய்துள்ளார்கள். பொதுவாகவே குடலின் லைனிங் தானாகவே ரீஜெனேரட் ஆகும். பிட்ஸ்பர்க் பல்கலைகழகம் நடத்திய ஒரு புதிய ஆய்வில், சர்க்கரை அதிகமாக இருக்கும் பட்சத்தில், செல்கள் தானாகவே சீரமைத்துக் கொள்வதை தடுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், செல்லுலார் மற்றும் மாலிகுலர் காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் ஹெபடாலஜியில் வெளியிடப்பட்டது. சர்க்கரை உணவுகளைக் குறைப்பது எவ்வாறு குடல் அழற்சி நோயாளிகளின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது என்பதை விளக்குகிறது. ஆங்கிலத்தில், குடல் அழற்சி நோய் என்பது inflammatory bowel disease (IBD) என்று கூறப்படுகிறது.

பிட்ஸ்பர்க்கின் பிட்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் யுபிஎம்சி குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவம் மற்றும் நோயெதிர்ப்புத் துறையின் இணைப் பேராசிரியர், மூத்த எழுத்தாளரான டிமோதி ஹேண்ட், பிஎச்.டி., “குடல் அழற்சி நோயின் பாதிப்பு உலகம் முழுவதிலும் அதிகரித்து வருகிறது. தொழில்துறையாக்கம் வேகமாக வளர்ந்துவரும் நாடுகள் மற்றும் அர்பன் வாழ்க்கை முறை பின்பற்றப்படும் நாடுகளிலும் இவை அதிகமாக காணப்படுகிறது. இது வேகமாக வளர்வதற்கு முக்கிய காரணம் இத்தகைய நாடுகளில் காணப்படும் உணவுப்பழக்கங்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பது தான்” என்று கூறியிருக்கிறார்.
குடல் அழற்சி என்பது மட்டுமல்லாமல் அதிக இனிப்பு அல்லது சர்க்கரை சாப்பிடுவது உடல் நலத்துக்கு பலவிதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த செரிமானம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக சர்க்கரை எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்பதை சான்றுடன் இந்த ஆய்வு காண்பிக்கிறது. ஏற்கனவே குடல் அழற்சி நோய் இருப்பவர்கள், ஹை-டென்சிட்டி சர்க்கரை இருக்கும் சோடா, மிட்டாய்கள் உள்ளிட்ட உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எலிகளுக்கு சாதாரண அளவில் சர்க்கரை இருக்கும் அல்லது அதிக சர்க்கரை கொண்ட டயட் உணவு வழங்கப்பட்டதன் மூலம் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. பெருங்குடலை சேதப்படுத்தும் DSS என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளித்ததன் மூலம் அவர்கள் IBDஇன் அறிகுறிகளை உருவாக்கினார்கள். அதிர்ச்சியூட்டும் விதமாக, அதிக சர்க்கரை கொண்ட டயட் அழிக்கப்பட்ட எலிகள், ஒன்பது நாட்களில் இறந்துவிட்டன. சாதாரணமான டயட் வழங்கப்பட்ட எலிகள் ஆய்வு முடியும்வரை ஆய்வு முடியும் 14 நாட்கள் வரை உயிருடன் இருந்தன.
ஆய்வின் மற்றொரு டைரக்டரான ஹான்ட் என்பவர், ‘பெருங்குடலின் மேற்புற திசு என்பது ஒரு கன்வேயர் பெல்ட் போன்றது. செல்களின் கீழே இருந்து, ஒரு சர்க்யூட் வழியாக பயணம் செய்ய ஐந்து நாட்கள் ஆகும், பின்னர் அவை பெருங்குடலில் உதிர்ந்து, மலம் வழியாக வெளியேறும். ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, புதிய பெருங்குடலை உருவாக்குகிறீர்கள்’ என்று கூறியுள்ளார்.
அதிக சர்க்கரை உள்ள டயட் வழங்கப்பட்ட எலிகளுக்கு DSS என்ற ரசாயனம் கொடுக்கப்பட்ட பொழுது அந்த சர்க்யூட் கொலாப்ஸ் ஆகி விட்டது. ஒரு சில விலங்குகளில் எபிதீலியல் செல்கள் ஒரு பாதுகாப்பு லேயராக இருக்கும், அது முழுவதுமாக காணாமல் போனது. இதனால் பெருங்குடல் முழுவதுமே ரத்தம் மற்றும் நோய் எதிர்ப்பு செல்களால் நிறைந்திருந்தன.
இதனால், DSS மூலம் சிகிச்சை அளிக்கப்பட கிருமி இல்லாத எலிகளுக்கு, சர்க்கரை பெருங்குடலை நேரடியாக தாக்குகிறது. இது வயிற்றுப் பகுதியில் இருக்கும் மைக்பையோமை சார்ந்து இயங்கவில்லை என்று ஆய்வாளர்கள் கணிப்பை வெளிப்படுத்துகிறது.
அடுத்ததாக, இந்த ஆய்வுக் குழு சர்க்கரை எப்படி எலி மற்றும் மனித கொலோனாய்டுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பரிசோதித்தது. இவை, ஆய்வகங்களில் வைத்து உருவாக்கக்கூடிய கசகசா விதையின் அளவில் இருக்கும் ஒரு மினியேச்சர் குடல் ஆகும். அதிக கான்சென்ட்ரேஷன் இருக்கும் குளுக்கோஸ், சுக்ரோஸ் அல்லது ஃப்ருக்டோஸ் ஆகியவை அதிகப்படியாக வழங்கப்பட்டபோது, இந்த மினியேச்சர் குடல்களின் வளர்ச்சி குறைந்தது அல்லது வளர்ச்சியின் விகிதம் மெதுவாக இருந்தது. இதன் மூலம், சர்க்கரை செல்கள் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
Also Read | Blood Sugar | இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் 10 ஆரோக்கிய உணவுகளும், பானங்களும்!
கூடுதலாக இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் அதாவது பழச்சாறுகள் சோடா சாங்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் ஆப்பிள் அல்லது ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் கூட, நீங்கள் நிறைய சர்க்கரை தான் சாப்பிடுகிறீர்கள்; ஆனால் இந்த பழங்களில் இருக்கும் சர்க்கரை அந்த பழங்களின் செல்கள் உடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், இவை செரிமானமாவதற்கு கொஞ்சம் தாமதமாகும், உடனடியாக செரிமானம் ஆகாது. அது மட்டுமில்லாமல் பழங்களில் இருந்து நீங்கள் சாப்பிட்ட சர்க்கரை ரத்தத்தில் உடனடியாக சேராது. ஆனால் நீங்கள் சோடா குடிக்கும் பொழுது அதில் இருக்கும் சர்க்கரை உடனடியாக ரத்தத்தில் கலந்து, சர்க்கரை அளவை குறுகிய நேரத்திலேயே அதிகரிக்கும். அதிக அளவு சர்க்கரை சாப்பிடுவது என்பது ஏற்கனவே குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பெருங்கடலை சீர்செய்வதில் எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.