தமிழ்நாடு: சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர் – மலைகிராமங்களில் ஏன் இந்த நிலை?

Share

தமிழ்நாடு, பழங்குடிகள்

பட மூலாதாரம், SOCIAL MEDIA

படக்குறிப்பு,

குழந்தையின் உடலை சுமந்து செல்லும் காட்சி

அந்த பெற்றோர் இறந்துபோன தங்கள் குழந்தையின் உடலை கைகளில் சுமந்துகொண்டு , மலையேறி தங்களது கிராமத்திற்கு நடந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் கடந்த ஞாயிறன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

அவர்களின் ஊருக்கு சாலை வசதி இல்லாததால், அந்த குழந்தையின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் அவர்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றது, குழந்தையை இழந்து தவித்திருந்த அவர்களை மேலும் உடைந்துபோக செய்தது. கிட்டதட்ட இரண்டு மணி நேரத்தில், பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தங்களின் கிராமத்தை அடைந்த அவர்கள், தங்கள் குழந்தையின் இறுதிசடங்கை செய்து முடித்தனர்.

அந்த குழந்தையின் பெயர் தனுஷ்கா. வயது 18 மாதங்கள்! ஊர் – வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை அடுத்த அல்லேரி மலைப்பகுதிக்கு உட்பட்ட அத்திமரத்துக்கொல்லை கிராமம், தமிழ்நாடு.

வேலூர் அல்லேரி மலைப்பகுதி மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு மலைகிராம பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் இன்றளவும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார்கள் பழங்குடியின மக்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com