இந்த பானங்கள் உடல் பருமன் அபாயத்தை அதிகரிப்பதை தவிர, சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்துடன் தொடர்புடையது. ஏனென்றால் இந்த பானங்களில் வெற்றுகலோரிகள் (Empty Calories) மற்றும் அதிக அளவு சர்க்கரை இருக்கின்ற. கார்போனேட்டட் ட்ரிங்ஸ் (Carbonated drinks) பொதுவாக Fizzy drinks எனவும் குறிப்பிடப்படுகின்றன. இந்த பானங்கள் கார்போனேட்டட் நீரில், கரைந்த கார்பன் டைஆக்ஸைடை (Dissolved carbon dioxide) கொண்டுள்ளன. கார்போனேஷன் ப்ராசஸின் போது உருவாக்கப்பட்ட கார்போனிக் ஆசிட் நம் நாக்கில் Tingly சென்சேஷனை ஏற்படுத்தி நம்மை அந்த பானங்களுக்கு அடிமையாக்குகிறது. சோடா, கோலா, சாஃப்ட் ட்ரிங்ஸ்களில் கார்போனேட்டட் தண்ணீர் உள்ளது.
Fizzy ட்ரிங்க்ஸ் நிறைய குடிப்பீர்களா? உஷார்.. உங்கள் கிட்னி பாதிக்கப்படலாம்..
Share