LSG v MI: `பம்பாய்க்கு பாட்ஷா நான்தான்…’ – மீண்டும் நிரூபித்த ரோகித்; மும்பை சாதித்தது எப்படி? | IPL 2023: LSG v MI Match Analysis

Share

அவர் வந்து இரண்டு பவுண்டரி இரண்டு சிக்சர்கள் என அடிக்க மும்பை 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்தது. நவீன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை லக்னோ அணிக்காக வீழ்த்தினார். இந்த மைதானத்தில் இது பெரிய இலக்கு தான் என்றாலும் அதை விரட்டி பிடிக்க களத்திற்கு வந்தனர் லக்னோ அணியின் ஓப்பனர்கள். முக்கியமான ஆட்டத்தில் டீ காக்கை விட்டுவிட்டு மேயர்ஸை எடுத்து வந்திருந்தது லக்னோ. மன்கட் எனும் மற்றொரு வீரர் மேயர்ஸ் உடன் இணைந்து துவக்கம் தந்தார். ஆனால் மத்வால் வீசிய இரண்டாவது ஓவரில் மன்கட் ஆட்டமிழந்தார். பலரும் ஆச்சரியபடும்படி ஜோர்டனிடம் அவுட் ஆனார் மேயர்ஸ்.

அதன் பின்பு களத்திற்கு ஸ்டாய்னிஸ் மற்றும் க்ரூணால் வந்தனர். ஸ்டாய்னிஸ் அதிரடியாகவும் க்ரூணால் மெதுவாகவும் ஆட ஆரம்பிக்க லக்னோ ரசிகர்கள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தனர். ஆனால் தேவையற்ற ஷாட் ஆடி அவர்களை மீண்டும் குனிய வைத்தார் க்ரூணால். இந்த நேரத்தில் சரியாக மத்வாலை மீண்டும் கொண்டு வந்தார் ரோகித். அவர் ஒரே ஓவரில் பதோனியையும் ஆபத்தான பூரனையும் வெளியே அனுப்ப சேப்பாக்கத்தில் இருந்த அத்தனை மும்பை ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். இருந்தாலும் மும்பை ரசிகர்களை உறுத்திக் கொண்டே இருந்த ஒரு விஷயம் களத்தில் ஸ்டாய்னிஸ் இருந்ததுதான். மும்பைக்கு ஏதோ நன்றிக்கடன் பட்டது போல ஸ்டாய்னிஸை ரன்‌ அவுட் ஆக்கி விட்டார் ஹூடா.‌ கண்மூடி முடிப்பதற்குள்ளே மீண்டும் மற்றொரு ரன் அவுட் நடந்தது.

இந்த முறை அவுட் ஆனவர் கௌதம். இரண்டு ரன் அவுட்டுகளை பார்த்த ஹுடாவுக்கும் ஆசை வந்து அவரும் ரன் – அவுட் ஆகியே வெளியேறினார். கடைசி நேரத்தில் மத்வால் இரண்டு விக்கெட்டுகளை எடுக்க மும்பை 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மத்வால் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்டநாயகன் ஆனார்.‌

குவாலிபையர்‌ 2 போட்டியில் வெல்லப்போவது குஜராத் டைட்டன்ஸ் அணியா அல்லது மும்பை இந்தியன்ஸ் அணியா உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com