Doctor Vikatan: சிலருக்கு மட்டும் ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் சாப்பிட்ட உடனே சளிப்பிடிப்பது ஏன்? | Doctor Vikatan: Why do some people get cold immediately after eating ice cream and cool drinks?

Share

Doctor Vikatan: சிலருக்கு மட்டும் ஐஸ்க்ரீமோ, கூல் டிரிங்ஸோ சாப்பிட்டால் உடனே சளி பிடிப்பது ஏன்? இரவு நேரத்திலும், மழைநாள்களிலும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் சளி பிடிக்குமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.

காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை

காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை

ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸை பொறுத்தவரை அவற்றின் டெம்ப்ரேச்சரை விடவும் அவை எவ்வளவு சுத்தமாகத் தயாரிக்கப்பட்டவை என்பதுதான் முக்கியம். உதாரணத்துக்கு வெளியிடங்களில் ஜூஸ் குடிக்கும்போது, அதில் ஐஸ்கட்டிகள் சேர்ப்பார்கள். அந்த ஐஸ்கட்டி எவ்வளவு சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டது என்பது கேள்விக்குரியதே. தெருவோரங்களில் சுகாதாரமற்ற முறையில் அடுக்கி வைத்து உடைக்கப்பட்டு, இதுபோன்று ஜூஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் குறித்த வீடியோ மற்றும் படங்களை நாம் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பார்க்கிறோம்.

அதுவே வீட்டில் நாம் ஃப்ரெஷ்ஷாக ஜூஸ் தயாரித்துக் குடிக்கும்போது, அது குளிர்ச்சியாக இருந்தாலும் பிரச்னை வராது. வெளியிடங்களில் தயாரிக்கப்படும் ஜூஸில் பயன்படுத்தப்படும் பழம், ஐஸ், தண்ணீர், கிளாஸ், கையாள்பவர் என எல்லாவகையான சுத்தமும் கவனிக்கப்பட வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com