Doctor Vikatan: ஒரே மாதத்தில் 5 கிலோ, 10 கிலோ எடை குறைவது சாத்தியமா… அது சரியானதா? | Doctor Vikatan: Is it possible to lose 5 kg, 10 kg in one month… is it correct?

Share

Doctor Vikatan: ஒரு மாதத்தில் எத்தனை கிலோ வரை எடை குறைப்பது நார்மல்? சிலர் 5 கிலோ, 10 கிலோ குறைப்பதாகச் சொல்கிறார்களே… அது ஆரோக்கியமானதா? அது சாத்தியமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

ஷீபா தேவராஜ்

ஷீபா தேவராஜ்

ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு கிலோவில் இருந்து அதிகபட்சமாக 3 கிலோ வரை எடை குறைவது நார்மலானது. அதைத் தாண்டுவது நல்லதல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல ஒரே மாதத்தில் 5 கிலோ, 10 கிலோ குறைவதெல்லாம் ஆரோக்கியக்கேடான விஷயம்தான்.

அப்படி ஒருவர் அதீதமாக எடை குறைகிறார் என்றால் அவர் மிகக் குறைந்த அளவே சாப்பிடுகிறார் அல்லது எந்தவிதச் சத்துகளும் இல்லாமல் சாப்பிடுகிறார் என்றே அர்த்தம்.

வெறித்தனமாக எடையைக் குறைக்கும் முயற்சியில் இப்படி உணவு விஷயத்தில் அலட்சியமாக இருக்கும் எத்தனையோ பேரை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். வெறும் நட்ஸ் மட்டும் சாப்பிடுவது, காய்கறி ஜூஸ் குடிப்பது என தீவிரமாக இருந்து 5 கிலோ, 10 கிலோவெல்லாம் எடையைக் குறைப்பார்கள். இது மிகவும் ஆபத்தானது. இப்படிச் செய்வதால், அதே வேகத்தில் எடை மீண்டும் கூடும் அபாயமும் இருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com