Sweet Potato Payasam | சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயசம் செய்ய ரெசிபி…

Share

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. பொதுவாக கிழங்கில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – 3 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 1

முந்திரி பருப்பு – 1டேபிள் ஸ்பூன்

பாதாம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

பால் – 3 கப்

ஏலக்காய் – 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை எடுத்து கொள்ளவும் அதில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு குக்கரை எடுத்து அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாதியாக வெட்டி வைக்கவும்.

2. அதில் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். வேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

3. பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்க்கவும். 5 நிமிடங்கள் பாலை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் ஜவ்வரிசி சேர்த்து நன்கு வெந்ததும் அதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி வேக வைக்கவும்.

Also see… ஸ்டப்டு பாகற்காய் செஞ்சுருக்கீங்களா?

4. பிறகு சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும் பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்.

5. பின்னர் பாதாம் பருப்பை அதன் மேல் தூவி விடலாம். இப்போது சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம் ரெடி.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com