விராட் கோலி சதம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 மாதங்களுக்குப் பிறகு சதம் – சச்சின், லாராவை முந்தினார்

Share

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட்டில் சாதனை நாயகனாகத் திகழும் நட்சத்திர வீரர் விராட் கோலி 1,205 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் கண்டுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் சதத்திற்கான தாகத்தைத் தணித்துக் கொண்டுள்ள அவர் சாதனைப் படிக்கட்டில் மேலும் ஒரு படி ஏறியிருக்கிறார்.

ஆமதாபாத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை விராட் கோலி எட்டியுள்ளார்.

முதல் இன்னிங்ஸில் 480 ரன் குவித்த ஆஸ்திரேலியாவுக்கு பதிலடியாக இந்தியாவும் அதிக ரன் குவித்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது.

இருபது ஓவர் போட்டிகளில் சதம், ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் என அண்மைக் காலமாக அசத்தி வரும் சுப்மன் கில், தொடக்க வீரராக களமிறங்கி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்றாவது நாள் ஆட்டத்தில் களத்தில் நாயகனாக ஜொலித்த அவர், 235 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com