வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: “24 மணிநேரம் அவகாசம் தருகிறேன், முடிந்தால் கைது செய்யவும்” – வழக்குப்பதிவு குறித்து அண்ணாமலை

Share

அண்ணாமலை

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், “வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்புப் பிரசாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்,” என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், “திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னைக் கைது செய்யவும். பொய் வழக்குகளைப் போட்டு ஜனநாயகக் குரல்வளையை நசுக்கிவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

ஒரு சாமானிய மனிதனாகச் சொல்கிறேன். 24 மணி நேரம் கால அவகாசம் அளிக்கிறேன். முடிந்தால் என் மீது கை வையுங்கள்,” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com