Doctor Vikatan: வருடக்கணக்காக வாக்கிங் செய்தும் குறையாத உடல் எடை… காரணமென்ன? | doctor vikatan – Weight that does not decrease after years of walking- What are the reasons?

Share

அதனால் வாழ்நாள் முழுவதும் உடல்திறனை மேம்படுத்துவதும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நடைப்பயிற்சி மட்டுமன்றி வேறு சில பயிற்சிகளையும் செய்வது சிறந்தது.

வாழ்க்கையில் இப்போதுதான் முதல்முறையாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கப் போகிறவர் என்றால் முதலில் வாக்கிங் மட்டும் செய்தாலே போதுமானது. சில நாள்களுக்கு வாக்கிங் செய்து உடலின் ஏரோபிக் தன்மை வளர்ந்தபிறகு மற்ற பயிற்சிகளையும் செய்யத் தொடங்கலாம்.

எடைக்குறைப்பு என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது. வெறும் வாக்கிங் மட்டும் செய்வேன், உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற மாட்டேன், தூக்கத்தை முறைப்படுத்த மாட்டேன் என்பது பலன் தராது.

எடைக்குறைப்புக்காக வாக்கிங் செல்வது என முடிவெடுத்துவிட்டால், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரைச் சந்தித்து அவரின் ஆலோசனைகளோடு சேர்த்து இரண்டையும் பின்பற்றும்போது நிச்சயம் பலன் தரும். வருடக்கணக்காக வாக்கிங் செய்தும் எடை குறையவில்லை என்றால், நீங்கள் உணவு விஷயத்தில் கோட்டை விட்டிருக்கலாம். மெதுவாக நடப்பவராக இருக்கலாம். இப்படி ஏதோ ஓரிடத்தில் தவறு நடந்திருக்கலாம். அதைத் தெரிந்து கொண்டு சரிசெய்யப் பாருங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com