ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின் கடைசி நாளான நாளை (25ம் தேதி) பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை காலை 9 மணிக்கு பிரசாரத்தை துவக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பத் நகரில் பொதுமக்களிடையே வேனில் நின்றவாறு பேசுகிறார். பின்னர் பெரிய வலசு, பாரதி தியேட்டர், சத்திரோடு, பஸ் ஸ்டாண்ட், மெட்ராஸ் ஹோட்டல், மஜித் வீதி வழியாக சென்று வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து, கருங்கல்பாளையம் காந்திசிலை அருகே வேனில் நின்றவாறு காலை 10 மணிக்கு பேசுகிறார். பின்னர் கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக சென்று 11 மணியளவில் அக்ரஹாரத்தில் பேசுகிறார். மாலையில் 3 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின் சம்பத் நகர், இடையன்காட்டு வலசு, சின்னமுத்து வீதி வழியாகச் சென்று, முனிசிபல் காலனியில் உள்ள கலைஞர் படிப்பகம் அருகில் பேசுகிறார். அங்கிருந்து மேட்டூர் ரோடு, பன்னீர் செல்வம் பூங்கா வழியாகச் சென்று மாலை 3.45 மணிக்கு பெரியார் நகரில் பொதுமக்களிடையே பேசி தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை ஒட்டி, 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்
Share
