நேபாளத்தின் கீர்த்திப்பூர் மைதானத்தில் நேபாளம் – ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டிக்குப்பின் ஸ்காட்லாந்து வீரர்கள் நேபாள நாட்டு அணி வீரர்களுடன் கைகுலுக்கினர். ஆனால் நேபாள வீரரான சந்தீப் லமிச்சானுடன் பலரும் கைகுலுக்க மறுத்துவிட்டனர். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் செயல்பட்டவர் சந்தீப் லமிச்சான். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு சஸ்பெண்டும் செய்திருந்தது.