ராஜேஷின் தந்தை அதாவது ஐஸ்வர்யாவின் தாத்தா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர். படங்களும் தயாரித்திருக்கிறார். பெயர் அமர்நாத். மகாவரி மயலு, அமரசந்தேசம் போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தர்மேந்திராவின் அன்கீன் இந்தித் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரது இளைய மகன்தான் ராஜேஷ். தந்தையைப் போல ராஜேஷும் நடிகரானார். நெலவங்கா, ரெண்டு ஜல்ல சீதா, க்ரிஷ் கர்னாட் பிரதான வேடத்தில் நடித்த ஆனந்த பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1991 இல் மம்முட்டி நடிப்பில் வெளியான அனஸ்வரம் படத்தில் வில்லனாக மலையாளத்தில் அறிமுகமானார்.
தாத்தா முதல் அத்தை வரை.. சினிமா குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. சாதித்துக் காட்டிய மூன்றாவது தலைமுறை!
Share