அவள் விகடனின் `நம்ம அப்பார்ட்மென்ட் கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்'- உணவுப்போட்டியில் அசத்திய குட்டீஸ்!

Share

அவள் விகடன் மற்றும் Freshey’s இணைந்து நடத்திய `நம்ம அப்பார்ட்மென்ட் கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்வு, சென்னை சாலிகிராமம், வடபழனி, ஐயப்பந்தாங்கல் ஆகிய இடங்களிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது.

`கலக்கப்போவது யாரு’ புகழ் பாலா, விக்கி சிவா மிமிக்ரி நிகழ்ச்சி

அவள் விகடன், பெண்களுக்கென பிரத்யேகமாக நடத்திய நிகழ்வுகளை நாம் கண்டிருப்போம். ஆனால் இம்முறை, ஆறு முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் தங்களின் அம்மாக்களுடன் இணைந்து பங்கேற்கும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காலை 10 மணிக்குத் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி, மாலை 6:30 மணி வரை நடைபெற்றது. சாலிகிராமம், வடபழனி, ஐயப்பந்தாங்கல் ஆகிய இடங்களிலுள்ள `டுலிவ் ஹாரிசான் ரெசிடென்சஸ்’, `அப்பாசாமி செரஸ்’, `அப்பாசாமி ஆர்சர்ட்ஸ்’, `இ.வி.பி பிரபு அவென்யூ’ ஆகிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்விற்கு பிரபல சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் நடுவராகப் பங்கேற்றார். `கலக்கப்போவது யாரு’ புகழ் பாலா, விக்கி சிவா ஆகியோர், சிறப்பு விருந்தினார்களாகப் பங்கேற்றனர். நான்சி, கீர்த்தனா நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகப் பங்கேற்றனர். இந்தச் சமையல் போட்டியில் குழந்தைகள் மற்றும் அவர்களின் அம்மாக்கள் பனீரை மட்டுமே வைத்து பலவகை உணவுகளைச் செய்து அசத்தினர்.

பார்வையாளர்கள்

காலை 10 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள `டுலிவ் ஹாரிசான் ரெசிடென்சஸ்’ அடுக்குமாடிக் குடியிருப்பில் போட்டி நடத்தப்பட்டது. பாடல்களுக்கு குழந்தைகள் உற்சாகமாக நடனமாடினர். பாலா, தனது வழக்கமான கவுன்டர் காமெடிகளால் நிகழ்வை சிரிப்பு ஒலிகளால் நிரப்பினார். இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 23 நபர்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர். இதில் அர்ப்ரீத், அச்சுதா நாராயணன், ராகவ் ஆகிய மூவரும் வெற்றி பெற்று, Freshey’s வழங்கிய சிறப்பு பரிசைத் தட்டிச் சென்றனர். நிகழ்வில் பங்குபெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் Freshey’s-ன் தயாரிப்புகள் பரிசாக வழங்கப்பட்டன.

அடுத்து, பகல் 12 மணியளவில், சாலிகிராமத்தில் உள்ள அப்பாசாமி செரஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இங்கு, 15 பேர் பங்கேற்றதில் மாதுரிமா அஸ்வின், நிவேதா, நித்ய தேஜ ஸ்ரீ ஆகிய மூவரும் வெற்றி வாகை சூடினர். பிற்பகல் 3 மணியளவில், வடபழனி அப்பாசாமி ஆர்சர்ட்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் போட்டி நடைபெற்றது. இதில் 21 நபர்கள் பங்கு பெற்றனர். அவர்களில் அனு மற்றும் ஹாசினி, சாத்விக், அனன்யா ஆகிய மூவரும் Freshey’s வழங்கிய பரிசுகளை வென்றனர்.

போட்டியில் பங்கேற்ற குட்டீஸ்கள்

மாலை 5 மணிக்கு ஐயப்பந்தாங்கல் இ.வி.பி பிரபு அவென்யூ அடுக்குமாடிக் குடியிருப்பின் பூங்காவில் போட்டி நடைபெற்றது. இங்கு, 49 பேர் பங்கேற்றனர். தருண் ராஜ், விஷ்ணுபிரியா, மகேஸ்வரி, தீக்ஷிதா ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் Freshey’s-ன் இட்லி, தோசை மாவு பரிசாக வழங்கப்பட்டது.

பாலா, விக்கி சிவா ஆகியோர் தங்களது மிமிக்ரியால் குழந்தைகள்,பெரியவர்கள் என பலரை ரசிக்க வைத்தனர். நடுவராகப் பங்கேற்ற சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத், ” யூடியூப் வந்த பிறகு, குழந்தைகளும் சமையலில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் மற்றும் பங்கேற்பாளர்கள்

புதுமையாகச் சிந்திக்கிறார்கள் அவர்களிடமிருந்து நாம் பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம். வெற்றி பெறாதவர்கள் வருத்தமடைய வேண்டாம். போட்டியில் பங்கு பெறுவதே நல்ல செயல்தான்” என்று ஊக்கப்படுத்தினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com