Doctor Vikatan: வாய்வழியே மூச்சு விடுவது ஆபத்தானதா? | Doctor Vikatan: Is mouth breathing dangerous?

Share

Doctor Vikatan: வாய் வழியாக மூச்சுவிடுவது எதனால் ஏற்படுகிறது? அதை எப்படி சரி செய்துகொள்வது?

– மனோபாலா, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ்.

நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ் | சென்னை

நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ் | சென்னை

நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் வழியே சுவாசிக்கிறோம். சிலர் வாய் வழியே சுவாசிப்பதுண்டு. மூக்கின் வழியே சுவாசிக்கும்போது மூச்சுக்காற்றிலுள்ள தூசு, சூழல் மாசிலுள்ள நுண்துகள்கள் போன்றவை வடிகட்டப்பட்டு, நுரையீரலுக்குள் அனுப்பப்படும்.

வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்று தாக்கும்போது, அது மூச்சுக்காற்றின் வழியே உள் செல்வதால், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் போன்றவை ஏற்படும்போது, மூக்கின் வழியே சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அதனால் சிலர் வாய் வழியே சுவாசிப்பார்கள். குறிப்பாக, குழந்தைகள்… மூக்கடைப்பு ஏற்படும்போது, இரவில் குழந்தைகளால் மூக்கின் வழியே சுவாசிக்க முடியாமல் வாய் வழியே சுவாசிப்பதைப் பார்க்கலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com