திருச்சி: செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள இடர்பாடுகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி
Share