குழந்தையை பிரசவித்த கையோடு பிகாரில் பொதுத் தேர்வு எழுதிய இளம்பெண் – குவியும் பாராட்டுகள்

Share

குழந்தை பிரசவித்த கையோடு 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இளம்பெண்

பட மூலாதாரம், VISHNU NARAYAN

பிகாரில் உள்ள பங்கா மாவட்டத்தில் வாழும் ஒரு பெண்ணுடைய தைரியம், தன்னம்பிக்கையின் கதை தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது. சமீப நாட்களில் பிகாரில் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. அதில் பங்கெடுத்தவர்களில் 22 வயதான ருக்மிணியும் ஒருவர்.

ருக்மிணி திருமணம் ஆவதற்கு முன்பாகத் தனது சொந்த ஊரான கட்டோரியில் படித்துக் கொண்டிருந்தார். பிறகு திருமணமாகி, அங்கிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பைல்வா என்ற கிராமத்தில் இருக்கும் கணவர் வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டார்.

அதனால், அவரது படிப்பு தடைபட்டது. ஆனால், மீண்டும் தான் படிப்பைத் தொடர வேண்டுமென்று விரும்பிய ருக்மிணி, 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்குப் படித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே ருக்மிணி கர்ப்பமாகியிருந்தார்.

அவர் கர்ப்பமாக இருந்தபோதே தேர்வுக்குத் தயாராகி, பிப்ரவரி 14ஆம் தேதியன்று கணிதத் தேர்வை எழுதினார். ஆனால், அதையடுத்து அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com