வழுக்கை தலையை காரணம் காட்டி பணி நீக்கம்; நிறுவனத்திற்கு ரூ.71 லட்சம் அபராதம்! |Man fired from company for being bald, court order to gives 71,000 pounds

Share

ஏதேதோ மழுப்பல் காரணங்களைக் கூறி, நிறுவனம் அவரை வெளியேற்ற முயற்சி செய்தது. அநீதி தாளாமல் தன்னுடைய உயர் பதவியை ராஜினாமா செய்தார், ஜோன்ஸ்.

தன்னுடைய ராஜினாமா கடிதத்தில், `என்னை மோசமாகக் காட்டுவதற்காக அற்ப அரசியலும், சதியும் நடந்துள்ளது. என்னைக் குறித்துக் குறை கூறும் அறிக்கையில், அப்பட்டமான பொய்கள் இருப்பது குறித்து வருந்தினேன்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு வழுக்கைத் தலையைக் காரணம் காட்டி, வேலையில் இருந்து தன்னை நீக்கிய நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டேங்கோ நெட்வொர்க் அவரிடம் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டு, பாகுபாடு காட்டி உள்ளது. எனவே அவருக்கு 71,000 பவுண்டுகள் (70 லட்ச ரூபாய் பணம்) தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்தின் வேலைவாய்ப்பு தீர்ப்பாயம், `ஓர் ஆணை வழுக்கைத் தலை என்று அழைப்பது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலாகக் கருதப்படும்’ என்று தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது… 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com