ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பொன்குமார் 3 நாட்கள் பிரசாரம்

Share

சென்னை: விவசாயிகள்-தொழிலாளர்கள்  கட்சி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 20 மாத கால ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, திமுக ஆட்சி ஏற்பட்ட பின் நலவாரியங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது, கட்டுமானத் தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்ள ரூ.4 லட்சம் நிதி வழங்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மாதத்தில் 8,97,548 தொழிலாளர்களுக்கு 676.99 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வாரியத்தின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனை எடுத்துக்கூறி ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில்  போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து விவசாயிகள் – தொழிலாளர்கள்  கட்சியின் தலைவரும், கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவருமான பொன்குமார்  பிரசாரம் செய்ய உள்ளார். தொகுதியில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் இல்லங்களில் திண்ணைப்பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 17ம் தேதி (இன்று) மற்றும் 18, 19 ஆகிய மூன்று நாட்கள் தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு சேகரிக்கிறார். தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவர் எ.பாலகிருஷ்ணன், மாநில இணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் எஸ்.ஜெகதீசன், ஈரோடு மாவட்ட தலைவர் முருகன், பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடேசன், அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ரபீக், அமைப்புச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் பங்கு கொள்கின்றனர். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com