எம்.எல்.ஏ பதவிக்கு ரூ.1 கோடி பேரம்?.. கே.பி.முனுசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு..!

Share

சென்னை: கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி. முனுசாமி ரூ.1 கோடி பணம் கேட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புகார் தெரிவித்துள்ளது. ஆடியோவை வெளியிட்டு கிரீன்வேஸ் சாலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது; 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டார். கே.பி. முனுசாமி ஆடியோ தான் இப்போது வெளியிட்டுள்ளேன்; அமைதியாக இல்லை என்றால் வீடியோவையும் வெளியிடுவேன். கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம் தான். இரு அணிகளும் ஒன்றாக இருந்த போதே முனுசாமி பேரம் பேசினார்.

என்னுடைய வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் வேலையை முனுசாமி செய்தார். கே.பி.முனுசாமி என்னிடம் பேரம் பேசிய ஆடியோவை வெளியிட்டது எனது தனிப்பட்ட முடிவு. கே.பி.முனுசாமி தனது சொந்த ஆதாயத்துக்காக உழைக்கிறார். கே.பி.முனுசாமிக்கு நிறைய பணம் கொடுத்துள்ளேன். எல்லோரிடமும் பணம் வாங்கிக் கொண்டு எம்எல்ஏ சீட் பெருத்த தந்துள்ளார். அதில் சிலர் எம்எல்ஏவாகவும் ஆகியுள்ளனர் இவ்வாறு கூறினார். முதலில் ரூ.50 லட்சம் தயார் செய்துவிட்டு, பிறகு 50 லட்சம் தருவதாக இருவரும் பேசும் ஆடியோ வெளியானது. பணத்தை வாங்க தனது மகனை அனுப்புவதாக கே.பி.முனுசாமி ஆடியோவில் பேசினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com