பூரி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பூரிக்கு மேலும் சுவை கூட்டும் விதமாக, சர்க்கரை – தேங்காய் சேர்த்து ஒரு வித்தியாசமான சுவையில்இனிப்பு பூரி சுடுவது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 2 கப்.
ஏலக்காய் – 3.
சர்க்கரை – 1 கப்.
ரவை – 1 கப்.
தேங்காய் – அரை மூடி.
எண்ணெய் – தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
> பூரி செய்வதற்கு முன் அரை மூடி தேங்காயை நன்கு துருவி தனி பாத்திரத்தில் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதே சமயம், ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
> தற்போது மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி சுடும் பதத்திற்கு மாவை பிசைந்துக்கொள்ளவும்.
> பின்னர், ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ரவை சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். இதை தொடர்ந்து, அதில் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
> ஏற்கனவே, பூரி பதத்திற்கு பிசைந்து வைத்த கோதுமை மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, அந்த உருண்டைக்குள் நாம் தயார் செய்து வைத்த சர்க்கரை – தேங்காய் கலவையினை சேர்த்து தனியே எடுத்துக்கொள்ளவும்.
> இந்த உருண்டைகளை பூரி சுடுவதற்கு ஏற்ற வகையில் தட்டையாக உருட்டிக்கொள்ளவும். மாவு உருண்டையில் வைத்த சர்க்கரை – தேங்காய் கலவை வெளியே வராத வகையில் உருட்டிக்கொள்வது நல்லது. பின்னர், அவற்றை வட்டமனாக தேய்க்கவும்.
> தற்போது பூரி சுட்டு எடுக்க, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும், இதில் உருட்டி தயாராக வைத்துள்ள பூரி மாவினை சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான இனிப்பு பூரி ரெடி.
> இந்த இனிப்பு பூரியை, அப்படியே ஒரு தட்டில் வைத்தும் பரிமாறலாம். தேவைப்பட்டால் பூரியுடன், தக்காளி சாஸ் அல்லது உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு சாஸ் சேர்த்து பரிமாறலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.