விவசாயிகளை அழ வைக்கும் அழகிய சின்னஞ்சிறு பறவைகள் – என்ன நடக்கிறது?

Share

  • டார்கஸ் வாங்கிரா
  • பிபிசி நியூஸ்

விவசாயிகளை அழ வைக்கும் அழகிய சின்னஞ்சிறு பறவைகள் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் குஜராத் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர் என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அதேபோல, கென்யாவில் சிட்டுக் குருவியை போன்ற பறவை ஒன்று நெல் பயிரிடும் விவசாயிகளை ஆட்டிப் படைத்து வருகிறது.

கென்யாவின் மேற்கு பகுதியில் கிசுமு என்ற நகரில் க்விலியா என்ற சிவப்பு நிற அலகு கொண்ட சின்னஞ்சிறு பறவைகள் படையெடுத்து அறுவடையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

“இந்த பறவைகளை விரட்ட நான் கத்தி கத்தி எனது குரலை இழந்துவிட்டேன். நாள் முழுவதும் இவைகளை விரட்டுவதே பெரும் வேலையாக உள்ளது. எதை கொண்டும் இந்த பறவையை விரட்ட முடியவில்லை. இந்த பறவைகள் எதற்கும் அஞ்சவில்லை,” என குசுமு பகுதியில் விவசாயம் செய்யும் ரோஸ் நேகேசா பிபிசியிடம் தெரிவிக்கிறார்.

இந்த பறவைகள் இல்லாத சமயத்தில் என்னால் தனியாக வேலை செய்ய முடியும். ஆனால் இப்போது குறைந்தது நான்கு பேர் வரை என்னோடு வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பணமும் அதிகம் செலவாகிறது. இந்த பயிர்கள் மட்டுமே எங்களது வாழ்வாதாரம்” என்கிறார் அவர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com