ஓடி ஓடி ஓட்டு கேட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி

Share

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் வீரப்பன் சத்திரம், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். வழக்கமான பிரசாரமாக அல்லாமல் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பிரசார யுக்திகளை அமைச்சர் செந்தில்பாலாஜி கையாண்டு வருகின்றார். நேற்று அசோகபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி வீதி வீதியாக ஓடி, ஓடிச்சென்றும், இருசக்கர வாகனத்தில் சென்றும் வாக்கு சேகரித்தார். வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகளோடு புகைப்படம் எடுத்துக்கொண்டது  வாக்காளர்களை மிகவும் கவர்ந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com