70,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்க வேண்டும்: துரைமுருகன் பேச்சு

Share

ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகின்றார். தேர்தல் பணிகள் குறித்து நேற்று திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டிலேயே சிறந்த முதல்வராக திறம்பட பணியாற்றி வருகிறார். கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் டெல்லி சென்று பிரதமர்களை சந்தித்து எத்தனையோ திட்டங்களையும், உரிமைகளையும் பெற்றுத்தந்தார். ஆனால் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிருந்தே டெல்லியை ஆட்டி படைக்கிறார். இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். குறைந்தபட்சம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com