இந்த நிலையில், மக்களவையில் இன்று நடைபெற்றக் கூட்டத்தில் மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக வாதங்கள் அரங்கேறின.
கேள்வி நேரத்தின்போது பேசிய தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, “எத்தனை மருத்துவக் கல்லூரிகள் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன… பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எத்தனை மருத்துவக் கல்லூரிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றன…” என்று கேள்வியெழுப்ப, `மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவேயில்லை’ என தி.மு.க எம்.பி-க்கள் குரலெழுப்பினர்.
முறையான உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் இல்லாத மருத்துவக் கல்லூரிகளின்மீது நான் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அதன்மீதான எதிர்வினைதான் இது. மேலும் இதுபோன்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிரான நடவடிக்கையையும் நாங்கள் தொடர்வோம்” என்றார்.
இதனால் தி.மு.க எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட, `அமைச்சர் எங்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்’ என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கூறினார். பின்னர் பா.ஜ.க எம்.பி-க்களும் குரலெழுப்ப, தி.மு.க எம்.பி-க்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். பிறகு, அமைச்சரின் பதில் சரியானதா, இல்லையா என்று ஆய்வு செய்வதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். இருப்பினும் தி.மு.க, காங்கிரஸ் எம்.பி-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.