Doctor Vikatan: ஒருவருக்கு வயிற்றுப் பகுதியில் வலி வரும்போது, அது கிட்னி கற்களால் ஏற்படுவதா, பித்தப் பை கற்களால் ஏற்படுவதா என்பதை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா
மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுக்குமான வேறுபாடுகளைப் பிரித்தறிவது சற்று சிரமம். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலோ, ரத்தக் கசிவோ இருந்தால் அவை பித்தப்பை கற்கள் பாதிப்பாக இருக்காது.
பித்தப்பை என்பது வலதுபுறத்தில் இருக்கும். அதாவது வலது சிறுநீரகத்துக்கு சற்று மேல்தான் பித்தப்பை இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியில் வலி ஏற்படும்போது அதை வேறுபடுத்திப் பார்ப்பது சற்று சிரமம்தான். வாந்தி, வயிற்றுவலி, காய்ச்சல் போன்றவை பித்தப்பை கற்கள் பாதிப்பிலும் வரலாம், சிறுநீரகக் கற்கள் பாதிப்பிலும் வரலாம்.