Ind Vs Aus: முதல் டெஸ்ட்டில் உதிர்ந்து விழும் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள், மாயம் செய்த ஜடேஜா, அஸ்வின்

Share

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

உதிர்ந்து விழும் ஆஸ்திரேலியா விக்கெட்டுகள்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 7 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச களம் கண்ட ரவீந்திர ஜடேஜா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்தியா வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தொடங்கியுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசத்தி வரும் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்டில் அறிமுகமானார். சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உள்ள ரிஷப் பந்துக்குப் பதிலாக, அறிமுக வீரராக விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் களம் கண்டுள்ளார்.

கால் மூட்டில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜ 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்தார். இந்திய அணி 3 சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. சுப்மான் கில், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு அணியில் இடம் தரப்படவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com