முதலில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்றுதான் நினைத்தோம். அதற்கு சட்டரீதியாக நிறையச் சிக்கல்கள் இருந்ததை உணர்ந்துகொண்டோம். மேலும், குழந்தை வளர்ந்தபிறகு உண்மையான பெற்றோர் யார் எனக் கூற வேண்டிய நிலை ஏற்படும். அப்போது குழந்தைக்கு எங்களுடன் வாழ விருப்பக் குறைவு ஏற்பட்டால் அதை எங்களால் சகிக்க முடியாது என்பதால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டோம். எனது டான்ஸ் கிளாஸுக்கு வரும் ஒரு குழந்தையின் அம்மா டாக்டராக உள்ளார். நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அவர்தான் எங்களுக்கு உதவினார். அவரிடம் ஆலோசனை நடத்திதான் இந்த முடிவை எடுத்தோம். குழந்தைக்கு மில்க் பேங்கில் இருந்து தாய்ப்பால் ஏற்பாடு செய்யலாம் என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு தாய்ப்பாலுக்கு எதாவது தீர்வு கிடைக்கும் என நினைக்கிறேன்.
திருநங்கை, திருநம்பிகளை இப்போது உலகம் அங்கீகரித்துவருகிறது. சினிமா, மேக்கப் ஃபீல்ட் உள்ளிட்ட பல துறைகளில் திருநங்கைகள் உள்ளனர். ஒரு கட்டத்துக்குப்பிறகு ஏதோ பிரச்னையால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது, இயற்கையாகவே இறந்துபோகிறார்கள். அத்துடன் திருநங்கையர் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. உங்களுக்கு என வருங்கால தலைமுறை வேண்டாமா என் டான்ஸ் கிளாஸுக்கு வந்த அந்த மாணவியின் அம்மா என்னிடம் கேட்டார். அவர்தான் எங்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான உத்வேகத்தைக் கொடுத்தார்” என்றார்.
எட்டு மாத கர்ப்பமாக இருந்தபோது திருநம்பி ஸஹத் பேசியதாவது, “நான் வீட்டைவிட்டு வெளியேறி ஒரு ஆண்டு தலைமறைவாக வாழ்ந்தேன். அதுபோல யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு மருத்துவமனையில் சென்று சர்ஜரி செய்துகொண்டேன். நான் திருநம்பியாக மாறும்போது இப்படி ஒரு ஆசை இருந்ததில்லை. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. டெலிவரி சிக்கலான விஷயம் என்பதால் டெலிவரி தேதிக்கு முன்னதாகவே மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் ஆகச் சொல்லியிருக்கிறார்கள். குழந்தை வயிற்றுக்குள் இருந்து அசைவதை உணரும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.