83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு ஓபிஎஸ் அணி மனு தள்ளுபடி

Share

ஈரோடு கிழக்கு ெதாகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. மனு தாக்கல் செய்த 96  வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து  கொண்டனர்.  தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் முன்னிலையில்  நடைபெற்ற பரிசீலனையில் 121  வேட்புமனுக்களில் 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில்முருகன் தனது வேட்புமனுவில் அதிமுக என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால்   அதிமுக தலைமையில் இருந்து ஏ, பி படிவங்கள் இணைக்கப்படாமல் இருந்தது. எனவே அவரது மனு தள்ளுபடி  செய்யப்பட்டது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்பட 83  வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

நாளை (10ம் தேதி) மாலை 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம்.   அதன்பிறகு இறுதி  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பு மனு ஏற்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தின் சார்பில் 191 சின்னங்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com