மோதி, மோதி Vs அதானி, அதானி முழக்கம் – சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர், மீண்டும் விமர்சித்த ராகுல்

Share

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Narendra Modi Youtube page screengrab

படக்குறிப்பு,

நரேந்திர மோதி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஊழல், நெருக்கடியை மட்டுமே இந்தியா கண்டதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டினார்.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவை கூட்டுக்கூட்டத்தில் சமீபத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமை பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சனம் செய்தார். என்ன நடந்தது மக்களவையில்?

“மக்களவையில் முந்தைய காங்கிரஸ் எம்.பி ஒருவரின் உரைக்குப் பிறகு அவரது கட்சியினர் உற்சாகமடைந்திருந்ததை நான் நேற்று பார்த்துக் கொண்டிருந்தேன், அவரது உரைக்கு பிறகு, ஒட்டுமொத்த ‘எகோ சிஸ்டமும்’ (காங்கிரஸ் எம்பிக்களை நையாண்டி செய்யும் வகையில் இவ்வாறு மோதி குறிப்பிட்டார்) உற்சாகத்துடன் துள்ளியபடி, “யே ஹுய் நா பாத்” (இது தானே பேச்சு) என்று மகிழ்ச்சியுடன் கூறினர். அந்த குஷியில் தூங்கியவர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை போலிருக்கிறது,” என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

மோதியின் இந்த பதிலுரைக்கு ஒரு நாள் முன்புதான் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசினார். அப்போது அதானி குழுமத்துக்கும் நரேந்திர மோதி அரசுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com