குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி ரெசிபி…!

Share

சத்து மாவு கஞ்சி குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் மிகவும் நல்லது. இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கம்பு – 100 கிராம்

ராகி – 100 கிராம்

கோதுமை – 100 கிராம்

பச்சரிசி – 100 கிராம்

உளுந்து – 100 கிராம்

பாசிப்பயறு – 100 கிராம்

கொள்ளு – 100 கிராம்

வேர்க்கடலை – 100 கிராம்

முந்திரி – 100 கிராம்

பாதாம் – 100 கிராம்

ஏலக்காய் – 100 கிராம்

ஜவ்வரிசி – 100 கிராம்

மக்காச் சோளம் – 100 கிராம்

கொண்டக்கடலை – 100 கிராம்

பொட்டுக்கடலை – 100 கிராம்

மாவு தயாரிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும். வறுத்தவுடன் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில் (அ) மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும்.

சத்துமாவு கஞ்சி தயாரிக்க தேவையான பொருட்கள்

சத்துமாவு – 2 ஸ்பூன்

பால் – 2 டம்ளர்

தண்ணீர் – 2 டம்ளர்

சர்க்கரை – தேவைக்கேற்ப

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும். கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும். சிறிது நேரத்தில் பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து கலக்கி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான, ஆரோக்கியமான சத்துமாவு கஞ்சி தயார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com