பூச்சிக்கொல்லி மருந்தால் நஞ்சாகும் தாய்ப்பால்… 111 குழந்தைகள் பலிக்கு காரணம்; ஆய்வில் அதிர்ச்சி! | breast milk led to death of 111 newborns, says study

Share

இந்த ஆய்வில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடும் 130 கர்ப்பிணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் சைவ உணவு சாப்பிடும் பெண்களை விட அசைவ உணவு சாப்பிடும் பெண்களின் தாய்ப்பாலில் மூன்று மடங்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

சைவ உணவான காய்கறிகள் மற்றும் பயிர்களில், பல்வேறு வகையான செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் சேர்க்கப்படுகின்றன. கால்நடைகளுக்கு ஊசி மூலம் ரசாயன மருந்துகள் செலுத்தப்படுவதால், இறைச்சி மூலம் அந்த ரசாயனங்கள் பெண்களுக்கும் செல்கிறது.

பூச்சிக்கொல்லி மருந்து

பூச்சிக்கொல்லி மருந்து
மாதிரிப்படம்

ரசாயன பூச்சிக்கொல்லிகள், பால் புகட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலிலும் கலந்து, அதனை அருந்தும் குழந்தைகளின் உடல்நலனை பாதிப்பதும், அவர்களின் இறப்புக்கு வழிவகுப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குழந்தைகளின் இத்தகைய இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், அதற்கான விரிவான காரணங்களைக் கண்டறியவும், தீர்வு காணவும், அப்பகுதி முதன்மை வளர்ச்சி அலுவலர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை மாவட்ட ஆட்சியர் அமைத்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு முடிவு, பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com