வீடியோவை எடிட் செய்ததாக நிருபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: அண்ணாமலை பேட்டி

Share

கோவை: எனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட வீடியோ எடிட் செய்யப்படவில்லை என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். கோயிலை இடிப்பதை பெருமையாக பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஒரிஜினல் வீடியோவை எ.வ.வேலு கூறும் இடத்தில் தருகிறோம். அந்த வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.மாநில தேர்தல் ஆணையத்திடம் வீடியோவை ஒப்படைக்க உள்ளோம். வீடியோவை எடிட் செய்ததாக எ.வ.வேலு நிருபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.

ஈரோடு கிழக்கில் பண விநியோகம் தொடங்கி விட்டது. இது பாஜகவின் தேர்தல் இல்லை, எங்கள் பலத்தை நிருபிக்கும் தேர்தலும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் தான் எங்களின் இலக்கு. பிபிசி ஆவண படம் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. பிபிசி ஆவண படத்தில் உண்மை இல்லை. ஆவண படத்தை தடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. ஈரோடு மேடையில் அமைச்சர் பேசிய ஆடியோ செய்தியாளர்கள் மைக்கில் பதிவாகி உள்ளது. அமைச்சர் செல்போனில் பேசிய ஆடியோ கிடையாது என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com