டயர் நிக்கோல்ஸ் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து வெளியான வீடியோ காட்சிகள் காட்டும் விவரங்கள்

Share

  • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
அமெரிக்காவில் போலீஸ் தாக்குதலில் இளைஞர் உயிர் இழப்பு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

மெம்ஃபிஸ் காவல்துறை அதிகாரிகளான டெமிட்ரியஸ் ஹேலி, டெஸ்மண்ட் மில்ஸ் ஜூனியர், எமிட் மார்ட்டின் III, ஜஸ்டின் ஸ்மித், டடாரியஸ் பீன் ஆகியோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடிய விளக்கங்கள் உள்ளன.

அமெரிக்காவில் போலீஸ் தாக்குதலில் டயர் நிக்கோல்ஸ் என்ற நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதில், போலீஸார் அவரை அடித்துத் துன்புறுத்துவது, மிளகு ஸ்பிரே தெளிப்பது, நிக்கோல்ஸ் “அம்மா” எனக் கதறுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. 

அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகரைச் சேர்ந்த டயர் நிக்கோல்ஸ் என்பவரை ஜனவரி 7ஆம் தேதியன்று, இரவில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

கவனக் குறைவாக வாகனத்தை இயக்கியதாகக் கூறி, அவர் மீது கடுமையான தாக்குதலை நடத்தியதோடு, மிளகு ஸ்பிரேவையும் போலீசார் தெளித்துள்ளனர். போலீஸாரின் தாக்குதலில் படுகாயம் அடைந்த நிக்கோல்ஸ் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com