பசுவதை தடுக்கப்பட்டால் பூமியில் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்… குஜராத் நீதிமன்றம் கருத்து! | All problems on earth will be solved if cow Slaughter are banned: Gujarat Court Opinion

Share

பசுவதைக்கும், பருவ நிலை மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது. தற்போதுள்ள பிரச்னைக்கு வெறித்தனமும், முன்கோபமும்தான் காரணமாகும். இவை அதிகரிப்பதற்கு பசுவதை தான் ஒரே காரணமாகும் என்று தெரிவித்த நீதிபதி இவ்வழக்கில் பசு மாட்டை கடத்திய நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16 பசு மாடுகளை கடத்தியதாக இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நபர் கைது செய்யப்பட்டார். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டதோடு 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் நீதிபதியின் கருத்துக்கு அறியல் பூர்வமாக ஆதாரம் இல்லை என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் பசு வதை தொடர்பான வாதங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வருவதில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பசு வதைக்கு பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பசுக்கள் லாரிகளில் கடத்திச்செல்லும்போது இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்துகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com