ஜெர்மனி உடனான மேட்ச்சை டிரா செய்தது நடப்பு சாம்பியன் பெல்ஜியம்

Share

ஒடிசாவில் நடபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணி ஜெர்மனியை டிரா செய்துள்ளது. ஆட்டம் தொடங்கிய 9 ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணி வீரர்செட்ரிக் சார்லியர் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய ஜெர்மனி வீரர்கள் பெல்ஜியம் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் வெல்லன் நிக்லாஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைப் படுத்தினார். இதன்பின்னரும் ஆட்டம் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த அணியின் டாம் கிராம்புஷ் தனக்கு கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக்கை அற்புதமாக பயன்படுத்தி ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் கோலாக மாற்றினார். இதையடுத்து 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி முன்னிலை வகித்து.

இதையடுத்து சுதாரித்து விளையாடிய பெல்ஜியம் அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். ஆட்டத்தின் 54 ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் விக்டர் வெக்னேஸ் அற்புதமாக கோல் அடித்தார். இதன்பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன.

அடுத்ததாக பெல்ஜியம் அணி ஜப்பானையும், ஜெர்மனி அடுத்ததாக தென் கொரியாவையும் எதிர்கொள்கின்றன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com