சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டி: ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு துவக்கத்தில் அரசு, ஆளுநர் உரையை தயாரித்து ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பப்படும். இதில் எது இடம்பெற்றது, இடம் பெறவில்லை என்பது எங்களுக்கு தெரியாது. எதனை ஆளுநர் அனுமதித்தார். அனுமதிக்கவில்லை என்பது எங்களுக்கு தெரியாது. அவையில் அவர் பேசுவது குறித்து நாங்கள் என்ன சொல்ல முடியும். நாங்கள் அவர் பேசுவதை கேட்கத்தான் வந்துள்ளோம்.
ஆளுநர் உரை குறித்து எடப்பாடி கருத்து
Share