விராட் கோலி – இந்தியா, இலங்கை கிரிக்கெட்: இன்னொரு சதம் அடிக்க முடிந்தது எப்படி? கோலி கூறிய மந்திரம்

Share

கோலி

பட மூலாதாரம், BCCI/TWITTER

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ரன்களைக் குவிக்க முடியாமல் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான விராட் கோலி, சமீப காலமாக தனது ஆட்டத்தைப் புதுப்பித்து உலகத்தை வியக்க வைத்திருக்கிறார்.

2019 நவம்பர் முதல் 2022 செப்டம்பர் வரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்று விமர்சித்தவர்களுக்கு பதில்கூறும் விதமாக இன்னொரு சதத்தை இந்திய மண்ணில் பதிவு செய்திருக்கிறார்.

“ஒவ்வொன்றும் கடைசி ஆட்டம்தான்” என்கிறார் விராட் கோலி. அதுதான் அவருடைய மந்திரம். இத்தனை ஆண்டுகளில் எப்போதும் போலத்தான் தான் தயாராகி ஆட வந்ததாக அவர் கூறுகிறார்.

இத்துடன் அவர் கிரிக்கெட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்று பலமுறை பேசப்பட்டது உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் ஏதோ ஒரு வகையின் தன்னை நிரூபித்து மீண்டு வந்திருக்கிறார். 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com