அதானி மோதியுடனான நட்பு, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து என்ன பேசினார்?

Share

கௌதம் அதானி

பட மூலாதாரம், Getty Images

முக்கிய சாராம்சம்

  • “ராகுல் காந்தி ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர். ஒரு தொழிலதிபராக நான் அவரைப் பற்றி கருத்து சொல்வது நல்லதல்ல.”
  • “நிறுவனத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. யார் சொல்வதாலும் அல்ல.”
  • “இன்று நாங்கள் 22 மாநிலங்களில் தொழில் செய்கிறோம். எல்லா இடங்களிலும் பாஜக ஆட்சியில் இல்லை. எங்களுக்கு எங்கும் பிரச்னை இல்லை.”
  • “ராகுல் காந்தியும் எங்களது முதலீட்டைப் பாராட்டியிருந்தார். ராகுல் காந்தியின் கொள்கை வளர்ச்சிக்கு எதிரானது அல்ல என்று நான் நம்புகிறேன்.”
  • “மோதியிடமிருந்து எந்தத் தனிப்பட்ட உதவியையும் பெற முடியாது. கொள்கை பற்றிய விஷயங்களை பேச முடியும்.”

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்தும் நரேந்திர மோதியுடனான தனது நட்பு குறித்தும் பேட்டியில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் விரிவாகப் பேசப்பட்டு வருகிறது.

“அவரால் (ராகுல் காந்தி) மக்களுக்கு அதானி என்ற பெயர் தெரிய வந்தது” என்று அதானி குறிப்பிட்டார்.

அதே நேரம் பிரதமர் நரேந்திர மோதி குறித்துப் பேசிய அவர், ‘மோதியிடமிருந்து தனிப்பட்ட முறையில் எந்த உதவியும் பெற முடியாது. ஆனால் மோதியுடன் ‘எனக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது’ என்றார்.

மத்தியில் ஆட்சியில் உள்ள நரேந்திர மோதி அரசை விமர்சிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நீண்ட காலமாக ‘அதானி குழுமத்துடன்’ பிரதமரின் ‘நட்பை’ குறிப்பிட்டு வருகிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com