இந்த நிலையில், முன்னணி திரைப்பட நடிகையான சாய் பல்லவி பாரம்பர்ய உடையான ஹெத்தையம்மன் உடையணிந்து விழாவில் பங்கேற்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
படுகரின பெண்கள் பாரம்பர்யமாக உடுத்தும் வெண்ணிற ஆடையில் வந்ததுடன் பாரம்பர்ய அணிகலன்களான வெள்ளி நகைகளையும் அணிந்து கொண்டு ஹெத்தையம்மன் கெட்டப்பில் தன் உறவினர்களுடன் திருவிழாவில் பங்கேற்றிருக்கிறார். திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியை ஹெத்தையம்மன் அவதாரத்தில் கண்ட உள்ளூர் மக்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். அதே கெட்டப்பில் உறவினர்களுடன் செல்ஃபி, போட்டோஷூட் என சாய் பல்லவி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.