சாத்தூர் படந்தால் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. எட்டாக்காப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதே பட்டாசு ஆலையில், சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் என்பவரின் மனைவி பத்மாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஒரே பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்த நிலையில், கருப்பசாமியும், பத்மாவும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வி.குமாரலிங்கபுரத்தில் வசித்துவரும் பத்மாவின் மாமியார், தான் விரதமிருந்து கோயிலுக்கு பாதயாத்திரை செல்ல விரும்புவதாக பாண்டிசெல்வத்திடம் தெருவித்திருக்கிறார். இதனால் தாயை வழியனுப்பி வைத்துவிட்டு வருவதாக கூறி, பாண்டிசெல்வம் மாலை வீட்டிலிருந்து வெளியே கிளம்பியுள்ளார். இந்நிலையில், பாண்டிச்செல்வம் வீட்டில் இல்லாததை, கருப்பசாமிக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பத்மாவின் வீட்டிற்கு வந்த கருப்பசாமி, அவருடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.