Doctor Vikatan: உணவுகளுக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்புண்டா? | Doctor Vikatan: Is diet and high blood pressure related?

Share

சில வகை உணவுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உதாரணத்துக்கு பொட்டாசியம் உள்ள உணவுகள். பிபியைக் குறைக்க மருத்துவர்கள் பொட்டாசியம் லிக்விட் கொடுப்பதைப் பார்க்கலாம். உருளைக்கிழங்கு, கீரை, கொத்தமல்லி போன்றவற்றிலும், ஆப்பிள் தவிர்த்த அனைத்துப் பழங்கள், வெள்ளரிக்காய் தவிர்த்த அனைத்து காய்கறிகளிலும் பொட்டாசியம் இருக்கிறது. அதற்கேற்ப காய்கறிகள், பழங்களைச் சாப்பிடலாம்.

ரெடிமேடு குளிர்பானங்கள், ரெடிமேடு குளிர்பான மிக்ஸ், இன்ஸ்டன்ட் டிரிங்க்ஸ், அப்பளம், சிப்ஸ், வடாம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம்
PIXABAY

லோ பிபி உள்ளவர்கள் அதிக உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்துக்கொள்கிறார்கள். அது மிகவும் தவறு. லோ பிபி உள்ளவர்கள், இளநீரில் இயற்கையான எலக்ட்ரோலைட் உள்ளதால் அதைக் குடிக்கலாம். நீர்மோர் மிக நல்லது. ஸ்மூத்தி சாப்பிடலாம். உடல் வறண்டுபோகாதபடி நிறைய திரவ உணவுகளைச் சாப்பிடுவது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com