‘ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு’ன்னு பேசினது சூர்யா. ‘ஒரேயொரு குலோப்ஜாமூன் சாப்பிட்டீங்கன்னா உடனே 3 கிலோ வெயிட் ஏறிடும்’னு பேசினது யார்யான்னு பாத்தா அதுவும் நம்ம டாக்டர் ஷர்மிகாதான்.
குழந்தை பெத்துக்க நல்லவனா இருந்தா போதும், எல்லாத்தையும் கடவுள் பாத்துப்பார்னு சொன்னதுல அந்த கடவுளே ஜெர்க் ஆகி ‘wait… what?’ அப்டின்னு கேட்ருப்பாரு.
கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும்; நுங்கு சாப்பிட்டா மார்பகம் பெரிசாகும்னு இவங்க அடிச்சுவிட்ட அரிய தகவல்களை ஃபாலோ பண்ணிப் போனா,
* இருமல் சரியாக இஷ்ட தெய்வத்தக் கும்பிடு
* சளி பிடிச்சா சாணி தேய்ச்சிக் குளி
* சுகர் பிரச்னையா துர்க்கை அம்மனுக்கு விளக்குப் போட்டு வேப்பிலை சாப்பிடு
* காய்ச்சல் வந்தா காளகஸ்தி போயி மூணு வேலை பூஜை பண்ணு
* சீதபேதிக்கு சீனாவுக்கு ஆன்மிக சுற்றுலா போங்க
* இரும்புசத்துக்கு தோசை சாப்டாம தோசைக் கல்லயே சாப்டுங்க
இப்படியெல்லாம் இவங்க See more… லிஸ்ட் போட்டு என்ன சொன்னாலும் நாம ஆச்சரியப்படுறதுக்கில்ல. ‘என்ன வேணா நடக்கட்டும் நாங்க சந்தோசமா இருப்போம்’னு ஆர்மி ஆரம்பிச்ச இவங்க ரசிக நோயாளிகள் இருக்கிற வர இப்படி ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கலாம். ஜாலியான ட்ரீட்மென்ட்டா இருக்கேனு வான்ட்டடா வண்டில வந்து ஏறின ரசிகர்களுக்காக ஃபேன்ஸ் மீட், ஆட்டோகிராப் மீட் இதெல்லாம் வைக்கிறதுல என்ன தப்புங்குறேன்? (பிரஸ் மீட் மட்டும் வேணாம்ங்க!)